Thursday, February 24, 2011

நானா? கிருஷ்ணசாமியா? -ஜான் பாண்டியன் ஆவேசம்!

 
         ஜான் பாண்டியன்.  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர். தென் மாவட்டங்களில்  தேவேந்திர குல சமுதாயத்தினரால் முதன் முதலில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அம் மக்களை ஒன்று திரட்டி 1995-ல் மாநாடு நடத்தியவர். அதிரடி அரசியல்வாதியான இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

"அத்தனையும் பொய் வழக்குகள்... அதனாலேயே, அவற்றிலிருந்து  மீள முடிந்தது. என் மீது ஒரு வழக்கு கூட இப்போது நிலுவையில் இல்லை. எட்டரை ஆண்டுகள் என்னை சிறையில் தள்ளிய,  கோவை விவேக் கொலை வழக்கும் அந்த ரகம்தான். உச்சநீதிமன்றமே 'நான் நிரபராதி' என்று தீர்ப்பளித்து விடுதலை செய்திருக்கிறது...' என பூரிப் பில் திளைத்திருந்த ஜான் பாண்டியனை நெல் லையில் அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

நக்கீரன் : சிறை அனுபவத்தைச் சொல்லுங்களேன்..

ஜான் பாண்டியன் : நக்கீரன் விரும்பினால் நான் தொடராகவே எழுதுகிறேன்... அந்த அளவுக்கு பல கொடுமைகள் நடக்கிறது. நானும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

நக்கீரன் :  இந்த விவேக் கொலை வழக்கில் உண்மையில் நடந்தது என்ன?

ஜா.பா.  :   எனக்கு கொலை செய்யப்பட்டவரை யும் தெரியாது. கொலையாளியையும் தெரியாது.  நிரபராதி என இப்போது விடுதலை ஆகியிருக்கும் கரீம் என்பவரிடம் நான் போனில் பேசினேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கொலைகாரனாக்கி விட்டார்கள்.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக இருந்த ரத்தின சபாபதி இப்போது ஏ.டி. எஸ்.பி.யாக இருக்கிறார். கொலையான விவேக்கும் இந்த ரத்தின சபாபதியும் ஒரே ஊர்க்காரர்கள்.  ஒரு சாதிக்காரர்கள். எட்டு வருடங்களுக்கு மேலாக என்னை சிறையில் முடக்கிவிட்ட அவரை நான் விடப்போவதில்லை.  வழக்கு தொடரப்போகிறேன்.  சாதிப் பார்வையோடு எனக்கெதிராக நடந்து கொண்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, ஹை கோர்ட் நீதிபதிகள் கூட இருக்கிறார்கள்.  குறிப்பிட்ட அந்த நீதிபதிகளின் பெயர்களைக் கூட என்னால் சொல்ல முடியும்.

சிறையில் அமைச்சர் வீர பாண்டியார் தம்பி மகன் பாரப் பட்டி சுரேஷை சந்தித்தேன்.  2007-ல் ஒரு சொத்து வாங்கியதற்காக அவரை 6 பேர் கொலை வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். என்ன கொடுமை? அமைச்சரின் உற வினருக்கே இந்த நிலை.

நக்கீரன்  :   நீங்கள் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும் என்பதற் காகவே உங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கு போக்காக நடந்து கொண்டதாக ஒரு பேச்சிருக்கிறதே..?

ஜா.பா. :  இது வதந்திதான். சிறையில் தகுதியின் அடிப்படை யில் எனக்கு கிடைத்து வந்த ஏ கிளாஸ் கேன்சல் ஆனதற்கு காரணமே கலைஞர்தான். தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒரு துளி அளவுக்கு... சிறு தூசி அளவுக்குக் கூட எனக்கு சப்போர்ட் பண்ண வில்லை.

நக்கீரன் : சிறை வாழ்க்கை உங்களை மாற்றியிருக்கிறதா? சாத்வீகமான நடவடிக்கைகளுக்கு இனி திரும்பவேண்டும் என்னும் சிந்தனை, அங்கே எந்த  சந்தர்ப்பத்தி லாவது உங்கள் மனதில் ஒரு உறுத்தலாக வெளிப்பட்டதா?

ஜா. பா. : சிறையில் நான் வருந்தியதோ, சிந்தனை வயப்பட்டதோ எதுவுமே நிகழவில்லை என்பதே உண்மை.  அதே நேரத்தில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. சுயசரிதை கூட எழுதி விட்டேன். இயல்பிலேயே  நான் சாத்வீகமானவன்தான்.

நக்கீரன்  : அப்படியென்றால் இன்றுவரை நிழலாக உங்களைத் தொடர்ந்தபடியே இருக்கும் இந்த ரவுடி இமேஜ்..?

ஜா.பா. : எட்டு வருடங்களாக சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எந்த ஒரு குற்றச் செயலிலாவது ஈடுபட்டிருக்க முடியுமா? ஆனால், இன்னும் இங்கே காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டில் என் பெயர் இருக்கிறது. 1986-ல் எம்.ஜி.ஆரே என்னை வந்து பார்த்தார். அவரது ஆட்சியில் துப்பாக்கி உரிமம் எனக்கு கிடைக்கச் செய்தார். 2001-ல் ஜெயலலிதா என்னோடு கூட்டணி வைத்துக்கொண்டு, வேட்பாளராக எழும்பூரில் நிறுத்தினார். ஒரு ரவுடியாக இருந்தால் அரசியல் தலைவர்கள் இத்தனை மரியாதை தருவார்களா? பல லட்சம் தேவேந்திர குல மக்கள் என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? மக்களோடு தொடர்பே இல்லாமல் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்த எனக்கு வழி நெடுகிலும் வரவேற்பு  தந்து, பாசத்தைப் பொழிவார்களா?

ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் கிளர்ந்தெழுவேன்.  தப்பு செய்பவன் அரசியல்வாதியாக இருந்தா லும்  யாராக இருந்தாலும், அவர்களுக்கு நான் சிம்ம சொப்பனம் தான். என் சமுதாயத்துக்கு ஒரு அரணாக நான் நிற்பது குற்றமா?

நக்கீரன் : கொடியன்குளம் கலவரத்தையெல்லாம் மறந்துபோகும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே  ஒரு இணக்கமான சூழல் நிலவுகிறதா?

ஜா.பா. :  சாதீய அடக்கு முறை இப்போதும் இருக்கவே செய்கிறது. பல கிராமங்களிலும் இணக்கமான சூழ்நிலை இல்லாததைப் பார்க்க முடிகிறது.

நக்கீரன் : 2001-ல் உங்களோடு கூட்டணி கண்ட அ.தி.மு.க. இப்போது புதிய தமிழகத்துடன் கூட்டணி கண்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

ஜா.பா. : நான் டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு பொருட் டாகவே எப்போதும் நினைப்பதில்லை. அவரும் களத்தில் இறங்கட் டும். நானா? அவரா? உண்மையிலேயே யார் தேவேந்திரர் என்பதை நிரூபிக்கட்டும். தேவேந்திர மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். 35 ஆண்டுகளாக என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். 1805-ல் என் மூதாதையர்கள் தூக்கிய கொடி அது. புதிய தமிழகம் என்று சொல்லிக்கொண்டு இனிமேல் யாரும் எங்கள் தாய்க்கொடி யைத் தூக்க விடமாட்டேன். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். அவர்களின் கருத்துக்களைக் கேட்கிறேன். எம் மக்களின் விருப்பப்படிதான் கூட்டணி அமையும். என்னுடைய  அரசியல் நடவடிக்கைகளும் இனி தீவிரமாக இருக்கும்.

யாருக்கும் ஒரு தொந்தரவும் தராவிட்டால் சரிதான்.. ஜமாய்ங்க ஜான் பாண்டியன்! 

சந்திப்பு : சி.என்.இராமகிருஷ்ணன்
 

Monday, September 13, 2010

எம் இனத்திற்கு எதிரான துரோகிகளுக்கான எச்சரிக்கை....







 
 மானங்கெட்ட தி மு க 
அரசே 
எம் மக்கள் விழிப்படைந்து விட்டோம். இலவசத்தால் எம் மக்களை ஏமாற்றி விடலாம் என்றா நினைத்தாய்?... எம் மக்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவர்கள், உன்னுடைய இலவசத்துக்காக (எங்கள் வரிப்பணத்தில்..) எங்கள் இனத்தை அடகு வைக்க நாங்கள் ஒன்றும் உங்களைப்போன்ற வந்தேறிகள் அல்ல, உண்ணுவதற்கு உழைப்பையும் ஆளுவதற்கு வீரத்தையும் எம் இனப்போராளிகள் எம் நெஞ்சில் விதைத்துள்ளனர். உனது அரியணைக்கும் அறிவாலயத்துக்கும் சாவு மணி அடிக்க கிளம்பிவிட்டோம். பரமக்குடியில் நாங்கள் எடுத்த சபதம் தேவேந்திரர் ஆட்சிக்கு அடித்தளம் அமைப்பது மட்டுமல்ல எம் இனத்திற்கு எதிரான துரோகிகளை ஒழிப்பதும்தான். இது உங்களுக்கான எச்சரிக்கை.... உங்களுடைய விளம்பரத்துக்கே இந்த நிலைமை எனில் உங்களுடைய நிலைமை (?) யை பார்த்துக்கொள்ளுங்கள் ...

தியாகி இம்மானுவேல் சேகரன் 53வது நினைவு தினம் ...


ஆதிக்க சாதிகள் எம் இனத்தை அடிமைத் தனமாய் அடக்கி ஆள நினைத்த போது அஞ்சா நெஞ்சனாய் வெகுண்டெழுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய எம் இனப்போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 53வது நினைவு தினம் தேவேந்திரர் இளைஞர் மன்றம் சார்பில் பல்லாவரத்தில் அனுசரிக்கப்பட்டது .தேவேந்திர சமுதாய மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்காக சத்தமில்லாமல் சமுதாயப்பணி செய்து கொண்டிருக்கும் ஐயா செல்லதுரை அவர்கள் தலைமையில் சமுதாயக்கொடி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பல்லாவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி இளைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர் . இதற்கான ஏற்பாடுகளை பல்லாவரம் தேவேந்திரர் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர் .

"அடக்கி ஆள நினைப்பது உன் குணம்
அடிமை விலங்கொடித்து ஆட்சி அமைக்கபோவது எம் இனம் ..."

Wednesday, September 1, 2010

தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி!

 


                 சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  
 
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக தெருவில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.
 
சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது?
"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.
 
முதல்வருக்கு நன்றி!" - தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.
"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்."

"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?"
"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது."

"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?"
"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது!"

"கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்?"
"நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்."

"அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்

உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?"
"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், 'எங்கேய்யா போறே?' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் 'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது.
இதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!"

"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?"
"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன்.
அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு."

"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?"
"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர் புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்."

"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"
"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவனாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.
 
இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்!"

Friday, May 14, 2010

தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம்......


தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம்நடைபெற்றது


முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரை சூட்டக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இமானுவேல் சேகரனை பொறுத்தவரை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சமூக சீர்திருத்த போராளியாக விளங்கினார்.

இதனால் அவரது மறைவிற்கு பிறகு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அவருடைய புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். எனவே இந்திய அரசும், தமிழக அரசும் இமானுவேல் சேகரனார் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில்மாநில மாணவர் அணி செயாலாளர் வ்ழக்கறிஞர் மதுரம் பாஸ்கர் சென்னை துறைமுகம் புதிய தமிழகம் பொதுசெயலாளர் கண்ணன்,மதுரை மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, எம்.பன்னீர் செல்வம், பாண்டியராஜன்,முனியாண்டி, சிற்றரசு,டிமிட்ரோ,ஆம்புலன்ஸ் முனியாண்டி, சுந்தராஜ்,காசிராஜன், முத்துகுமர், மணிகண்டராஜா, கண்ணன், திருநெல்வேலி கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் வீர அரவிந்து, கனேசன்,கருப்பழகு மகளிர் அணி மல்லைகா, முத்துலட்சுமி,மாநகர மாவட்ட அமைப்பு செயலாளர் எட்வர்ட்ராஜன்,தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கனகராஜ்,, கருப்பசாமி,பட்டவராயன், கண்ணன், சுடலைமணி, அருள்ராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல், திரு.பொட்டுபொட்டான்,முன்னாள் அமைப்பு செயலாளர்கள் ராஜாலிங்கம்,ராமராஜ், கோதண்டம், கார்த்திக்ராஜா, மகளிர் அணி காளிஸ்வரி, போக்குவரத்து கழகம் சார்பில் பழனிசாமி,பரமசிவம்,மோகன்குமரமங்கலம், வழக்கறிஞர் குமார்,பவுன்ராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வகுமரேசன், கலைசெல்வன், ராமநாதபுரம் ஐ.கதிரேசன், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் அய்யப்பன்,மாநகர அமைப்பு செயலாளர் சங்கர்,இளைஞர் அணி முகிலன் தேனி மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுந்தராஜ், ஈரோடு ஐமன்னன், கோவை சுப்பிரமணியன் உலகத் தமிழர் மாணவர் பேரியக்கம் சார்பில் ஜெகன் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொட்டுபொட்டான் அவர்கள் பழசாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். இறுதியாக தெய்வம் நன்றி கூறினார்.

Wednesday, April 21, 2010

மாவீரன் பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்...




தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரை திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-04-2010 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கு எதிரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் 80 வயது நிரம்பிய மூதாட்டி பார்வதியம்மாள் தமிழக மண்ணில் சிகிச்சை பெற அனுமதி மறுத்தது கண்டிக்கதக்கது. சமீபத்தில் தனது கணவனையும் இழந்து பல்வேறு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானவர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, மாவீரன் பிரபாகரன் தாயார் சிகிச்சை பெற மறுப்பது ஏன்? மேற்கண்ட செயல் மனிதபிமானம் தமிழக ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது.. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அவர்களை திருப்பி அனுப்பிய செயலுக்கு பிராயசித்தமாக தன்னுடைய சொந்த செலவில் அழைத்து மருத்துவ சிகிச்சை கொடுத்து, தொடர்ந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் தங்கியிருக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தே.சீ.சு.மணி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், துறைமுகம் கண்ணன், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் பி.எஸ். ராஜா, ராஜேந்திர பிரசாத், பத்மநாபன், கப்பிகுளம் பாபு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Friday, December 25, 2009

கீழ வெண்மணி எரிப்பு நிகழ்வு....



தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணியில், டிசம்பர் 25, 1968 அன்று இருபது பெண்களும், 19 குழந்தைகளும் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்ட நிகழ்வே கீழ வெண்மணி எரிப்பு நிகழ்வு.

வேளாண் தொழிலாளிகளான இவ்வூர் மக்கள், தாங்கள் அறுவடை செய்யும் வயல்களுக்கு கூலியாக தரும் ஒரு படி நெல்லில் இருந்து இரு படி நெல் தரவேண்டும் என வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கிழார்கள் இப்போராட்டத்தை ஒடுக்க, அடியாட்களை ஏவினர். அவர்கள் கீழ வெண்மணிக்கு சென்று கலவரங்களில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது, பாதுகாப்பு தேடி ஒரு குடிசையில் ஒளிந்த இருபது பெண்களும், 19 குழந்தைகளும் குடிசைக்குத் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது தி.மு.க வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு இந்தியா முழுவதிலும் மட்டுமின்றி, உலகளவிலும் சீன ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்குக்கு அறமன்ற நடுவராக இருந்த நடுவர் செ. மு. குப்பண்ணன் நிலக்கிழார்கள் குற்றம் இழைத்தார்கள் என தீர்ப்பு வழங்கினார்[1]

இதற்குப் பின்னர் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பொதுவுடைமை கட்சிகள் தலைமை தாங்கின. மிகையாக பங்குகொண்ட கலப்பாளை சேர்ந்த குப்பு என்பவரை நஞ்சு கொண்டு சிறையில் கொன்ற நிகழ்வும், எரிப்பு நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், சித்தமல்லி முருகையன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும்) வெட்டி கொல்லப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வை விளக்கி ராமையாவின் குடிசை என்று குறும்படம் வெளிவந்தது.



Friday, December 11, 2009

DEVENDRAR NGO DIRECTOR'S MEET



Important decision was taken in this meeting:

  1. “Tamilnadu Indigenous Collective” (TIC) is the name of our Devendrar NGOs’ Network.

  1. Mr.J.Prabhakaran (his Mobile No is 9586251948) was elected as the Convener of TIC and Mrs. Selvaranijeevan (her mobile no is 9487541416) was appointed as a Information and Communication officer.

  1. All the Legal Binding was undertook by ATWT.

Mr. Ravikumar was called as a consultant for this meeting. Due to Global Warming (climate change), Agriculture has been destroying in Tamilnadu. So, he requested the NGO Directors to work among the small and marginal Farmers issue. Consultant was also agreed to raise the Fund for giving awareness programme as well as to create Model Farming in Each District.

Next meeting is on 5th Jan '2010

Thursday, October 22, 2009

தியாகி இம்மானுவேல் சேகரன் 85வது பிறந்த நாள் மற்றும் கன்சிராம் ஜி 3வது நினைவு தின சரித்திர பாத யாத்திரை ...

முதல் நாள் யாத்திரை 09-10-2009 அன்று தேனி சின்னமனூர் தேவேந்திரர் முறை சாவடியில் இருந்து புறப்பட்டு தேனி அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தில் பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது. திரு ஜீவன்குமார் அவர்களின் உணர்வுமிக்க பேச்சு அனைவரையும் தட்டி எழுப்பியது .


இரண்டாம் நாள் யாத்திரை


மூன்றாம் நாள் யாத்திரை

நான்காம் நாள் யாத்திரை


ஐந்தாம் நாள் யாத்திரை


ஆறாம் நாள் யாத்திரை



ஏழாம் நாள் யாத்திரை

எட்டாம் நாள் யாத்திரை

ஒன்பதாம் நாள் யாத்திரை





பத்தாம் நாள் யாத்திரை






பதினொன்றாம் நாள் யாத்திரை





பன்னிரெண்டாம் நாள் யாத்திரை



கடைசி நாள் யாத்திரை










இந்த யாத்திரை
கால்களின் வலிக்காக அல்ல
காலத்தின் வலிமைக்காக ...!