தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணியில், டிசம்பர் 25, 1968 அன்று இருபது பெண்களும், 19 குழந்தைகளும் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்ட நிகழ்வே கீழ வெண்மணி எரிப்பு நிகழ்வு.
வேளாண் தொழிலாளிகளான இவ்வூர் மக்கள், தாங்கள் அறுவடை செய்யும் வயல்களுக்கு கூலியாக தரும் ஒரு படி நெல்லில் இருந்து இரு படி நெல் தரவேண்டும் என வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கிழார்கள் இப்போராட்டத்தை ஒடுக்க, அடியாட்களை ஏவினர். அவர்கள் கீழ வெண்மணிக்கு சென்று கலவரங்களில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது, பாதுகாப்பு தேடி ஒரு குடிசையில் ஒளிந்த இருபது பெண்களும், 19 குழந்தைகளும் குடிசைக்குத் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது தி.மு.க வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு இந்தியா முழுவதிலும் மட்டுமின்றி, உலகளவிலும் சீன ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்குக்கு அறமன்ற நடுவராக இருந்த நடுவர் செ. மு. குப்பண்ணன் நிலக்கிழார்கள் குற்றம் இழைத்தார்கள் என தீர்ப்பு வழங்கினார்[1]
இதற்குப் பின்னர் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பொதுவுடைமை கட்சிகள் தலைமை தாங்கின. மிகையாக பங்குகொண்ட கலப்பாளை சேர்ந்த குப்பு என்பவரை நஞ்சு கொண்டு சிறையில் கொன்ற நிகழ்வும், எரிப்பு நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், சித்தமல்லி முருகையன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும்) வெட்டி கொல்லப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வை விளக்கி ராமையாவின் குடிசை என்று குறும்படம் வெளிவந்தது.
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment