Thursday, July 30, 2009
Monday, May 25, 2009
Wednesday, March 11, 2009
தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்....!
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில் முப்புடாதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் வழிபட்டு வந்த தேவேந்திர மக்களுக்கும், இன்னொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் மார்ச் 6ம் தேதி ஒரு சமூகத்தினர் பேச்சு வார்த்தைக்கு முன் வராததால் தேவேந்திர மக்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவிழா ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. திருவிழா ஏற்பாடுகளால் இன்னொரு பிரிவினர் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் திருவிழா பணிகளில் ஈடுபட்ட கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோரை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம், ஈஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். சுரேஷ் பலத்த காயமடைந்தார். தமிழக அரசும், காவல்துறையும் முன்னேச்சரிக்கையுடன் செயல்படாததால் தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், இது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. கொலை வெறி தாக்குதல் நடத்தியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரூ. 5 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும்...
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், கோவிலில் மூன்று சமூதாய மக்கள் வழிபாடு நடத்த சட்டரீதியான பாதுகாப்பு வழங்காமல் பேச்சுவார்த்தையை நீடித்ததுதான் கொலைக்கு காரணம்.
இந்த சம்பவத்தில் சாதாரண கிராம மக்கள் ஈடுபடவில்லை. கூலிப்படையினரும் சம்பந்தபட்டு இருக்கிறார்கள். செந்தட்டி கிராமத்தில் திட்டமிட்டு மோதலை உருவாக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அரசு உரிய பாதுகாப்பு, உரிமைகளை வழங்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ. ஒன்றரை லட்சம் மட்டுமே அரசு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு ரூ. 5 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கிராமத்துக்கு செல்ல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
Tuesday, March 3, 2009
பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்
Saturday, February 21, 2009
போர் நிறுத்தத்தை சீர்குலைத்தது இந்தியாவே...!
"Vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Later on, all ran into trouble.
Because they did not stop arming the E.P.R.L.F. (Ealam peoples Revolutionary
Liberation Front). 'RAW' was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they could't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual stand still. And the whole thing took an ugly turn. They started anti - I.P.K.F. demonstrations."
"விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள்.
காரணம், உளவு நிறுவனமான 'ரா', 'ஈ.பி.ஆர். எல்.எப்.' என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான 'ரா'. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆக°ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. 'அமைதிப்படைக்கு' எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்" என்று எழுதுகிறார் ஹர்சிரத் சிங்! மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
"1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்" என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், "நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்" என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள் ளோம் என்று கூறினோம்.
அதற்கு தீட்சத், "எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்" - என்று ஹர்சிரத்சிங் தனது "Intenvention in Srilanka" நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.
"In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987.
On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, 'He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.'
நியாயவான்களைப்போல் புனித வேடம் போடும் ப. சிதம்பரம் அவர்களே!
இந்தியாவின் நேர்மையான அதிகாரி அமைதிப்படைத் தளபதியின் இந்த கருத்துக்கு, நீங்கள் தரும் பதில் என்ன? இந்தியாவை நம்பி, இராஜீவ் உறுதியை நம்பி, ஆயுதங்களை ஒப் படைத்து, வெள்ளைக் கொடியின் கீழ் சமாதானம் பேச வந்த ஒரு தலைவனை சுடச் சொன்ன ராஜீவின் யோக்கியதைக்கு என்ன பதில் கூறுவீர்கள்?
விடுதலைப்புலிகளிடம் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, மற்றொரு குழுவிடம் ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசின் துரோகத்திற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? அதே துரோகக் குரலை இப்போது மயிலாப்பூர் பொதுக் கூட்ட மேடையில் நின்று கொண்டு புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கூற, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
புலிகள் ஆயுதம் ஒன்று தானே தமிழர்களின் பாதுகாப்பு! ஆயுதம் ஏந்தி ராணுவத்தின் ஆக்கிர மிப்பையும் இனப் படுகொலையையும் எதிர்த்தினால் தானே சிங்களம் சமாதானம் பேசவே முன் வந்தது! போராளிகள் ஆயுதம் ஏந்தாத காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து இலங்கையில் ஒற்றையாட்சி முறையை சட்ட மாக்கியவர்கள் தானே சிங்களர்கள்?
1957 இல் தந்தை செல்வா பண்டார நாயகாவுடன் செய்த ஒப்பந்தம் என்னவானது?
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தில் தமிழர்கள் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும், தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கொண்டு வரப்பட்ட சட்டம், கிடப்பில் போடப் பட்டதே! இப்படி செல்வாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காகவே 1959 இல் அதிபர் பண்டார நாயகாவை சிங்கள புத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றானே! ஆயுதம் ஏற்காத காலத்தில் நடந்த இந்த அடக்குமுறை வரலாறுகள் ப. சிதம்பரங்களுக்குத் தெரியாதவையா?
ஒப்பந்தத்துக்குப் பிறகு இவ்வளவு துரோகங் களையும் செய்துவிட்டு, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட திட்டமிட்ட அதே காங்கிரஸ்கட்சியின் சிதம்பரம்தான் - இப்போது, "பிரபாகரன் சம்மதத் தோடு போடப்பட்ட ஒப்பந்தம் அது. அது நிறை வேறியிருந்தால் கடந்த 22 ஆண்டுகாலமாக தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும். தமிழன் ஒருவர் முதல்வராகியிருப்பார்" என்று காதில் பூ சுற்றுகிறார்.
வடக்கு- கிழக்கு மாநிலத்தில் ஒரு மாகாண சபையை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் உருவாக்கி, அதற்கு வரதராஜப் பெருமாள் என்ற தமிழனையும் பொம்மை முதல்வராக இந்திய ராணுவம் உடகார வைத்ததே; அந்த வரதராஜப் பெருமாள் என்ன ஆனார்? இந்திய ராணுவம் இந்தியாவுக்கு திரும்பி வரும் போதே தனது ராணுவ விமானத்தில் அந்த வரதராஜப் பெருமாளையும், அவரது குழுவினரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது. இன்று வரை அவர் இந்தியாவின் பாதுகாப்போடு பதுங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஈழத் தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக ராஜீவ் ஆட்சி, துப்பாக்கி முனையில் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்தோடு செயல்பட்டது தானே!
பிரபாகரனை அப்போதே தீர்த்துக்கட்ட உத்தரவு போட்ட காங்கிரஸ்தான், ராஜீவ் மரணத்தையே மீண்டும் மீண்டும் பேசுகிறது
Sunday, February 1, 2009
அநீதிகளுக்கெதிரான உயிராயுதம்,கு.முத்துக்குமார்

Thursday, December 18, 2008
வன்கொடுமை
Friday, November 21, 2008
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் உறங்கும் உண்மை!
சட்டக்கல்லூரியில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது புதிதல்ல. கடந்த நான்காண்டுகளாக பல மாணவர்களின் இதயங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை சம்பவத்தன்று வெடித்து சிதறி நெருப்பாறாய் ஓடியிருக்கிறது. சென்னையில் தலைமையகம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் 'தேவர் பேரவை' சட்டக்கல்லூரியை தொடர்ந்து அவதானித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து படிக்க வந்த தேவர் சமுதாய மாணவர்கள் இப்பேரவைக்கு பலிகடாவாக்கப்பட்டு வருகிறார்கள். இம்மாணவர்களைக் கொண்டு 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற அமைப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. முக்குலத்தோர் மாணவர் பேரவையின் முக்கிய நோக்கமே தலித் மாணவர்களை குறிவைத்து தாக்குவதாக இருந்திருக்கிறது.
மற்ற நான்கு அரசு சட்டக்கல்லூரிகளும் 'அரசு சட்டக்கல்லூரி' என்ற பெயரில் இயங்கும்போது சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரி மட்டும் ஏன் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரில் இயங்குகிறது என்றும் இப்பேரவை மாணவர்கள் பிரச்சினை செய்து வந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஒரு தலித் என்பதாலேயே அவரது பெயர் நீக்கப்படவேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக இவர்களால் பேசப்பட்டு வந்தது. இம்மாணவர்கள் கல்லூரி பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் 'சென்னை சட்டக்கல்லூரி' என்று மிகக்கவனமாக டாக்டர் அம்பேத்கர் பெயரை தவிர்த்து வந்திருக்கிறார்கள்.
'முக்குலத்தோர் மாணவர் பேரவை'யின் இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத பிரச்சினைகளையும், வெறுப்புகளையும் இரு தரப்பினரிடையே ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற செயல்களின் சூத்திரதாரியாக வன்முறை சம்பவத்தன்று தாக்கப்பட்ட பாரதிகண்ணன் என்ற மாணவர் இருந்திருக்கிறார். கடந்த ஆறுமாதகாலமாகவே கையில் பட்டாக்கத்தியோடு ஐந்து மாணவர்கள் துணையோடே எப்போதும் பாரதிகண்ணன் காட்சியளித்திருக்கிறார். குறைந்தது இரண்டு தலித் மாணவர்களையாவது போட்டுத்தள்ளவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்கிறது. காவல்துறைக்கு ஏற்கனவே இதுதெரிந்து அவரை கைது செய்திருக்கிறது. அவரிடமிருந்து மூன்று நீளமான பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டும் இருக்கிறது. ஆயினும் எந்த வழக்கும் பதியப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகத்துக்கு பாரதிகண்ணனின் இந்த போக்கு தெரிந்தும், அவரை அடக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில் பாரதிகண்ணனும் அவர்களது நண்பர்களும் ஒருமுறை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயிலக்கூடிய தலித் மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தாக்கியிருக்கிறார்கள். பாரதிகண்ணன் மீது கொலைமுயற்சி உட்பட குறைந்தது 17 வழக்குகள் இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வந்தது. முக்குலத்தோர் மாணவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் வழக்கம்போல டாக்டர் அம்பேத்கர் பெயர் தவிர்க்கப்பட்டு 'சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதே தினம் கல்லூரியில் தலித் மாணவர்களை சீண்டுவதும், கிண்டலடிப்பதுமான போக்கு அதிகரித்திருக்கிறது. தட்டிக்கேட்ட தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் "எந்த தலித் மாணவராவது கல்லூரிக்குள் நுழைந்தால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள்" என்று முக்குலத்தோர் மாணவர் பேரவை அறிவித்திருக்கிறது. அறிவித்தவாறே கல்லூரி வளாகத்தில் பேரவையை சேர்ந்த மாணவர்கள் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், பட்டாக்கத்திகள் ஆகிய ஆயுதங்களோடு சுற்றி வந்தார்கள். தலித் மாணவர்களால் தேர்வு எழுதும் அரங்குக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது. சில தலித் மாணவர்கள் மட்டும் அவர்களது கண்களுக்கு தப்பி தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவ்விவரங்கள் வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தான் கடந்த 12.11.2008 அன்று தங்களின் சுயபாதுகாப்புக்காக தலித் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்கள் ஆயுதமேந்தியதுமே விழித்தெழுந்து பிரச்சினையை பெரியதாக்கவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆயுதமேந்திய சில மாணவர்களோ மற்ற தலித் மாணவர்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் ஆயுதமேந்தியிருக்கிறோமே தவிர முக்குலத்தோர் பேரவை மாணவர்களை தாக்க அல்ல என்று விளக்கமளித்திருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை உள்ளிட்டவர்கள் குறைந்தது ஐந்து பேரையாவது கொல்லும் நோக்கத்தோடு இரண்டு அடி நீள கத்தியோடு எகிறிக்குதித்து, பலமாக குரலெழுப்பி ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட தலித் மாணவர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள்.
துரத்திவந்த பாரதிகண்ணன் மற்றும் ஆறுமுகம் இடையே சித்திரைச்செல்வன் என்ற தலித் மாணவர் மாட்டிக் கொண்டார். சித்திரைச் செல்வனின் தலையை வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். சித்திரைச்செல்வன் தலையை அசைத்ததால் கத்தி காதில் இறங்கி காது அறுபட்டு ரத்தம் சொட்டியது. சித்திரைச்செல்வனை காப்பாற்ற திரும்ப ஓடிவந்த தலித் மாணவர்களிடையே பாரதிகண்ணனும், ஆறுமுகமும் சிக்கிக் கொண்டார்கள். அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே முழுப்பொறுப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக சாதிவெறி கல்லூரி வளாகத்துக்குள் தலைவிரித்து ஆடியும், தலித் மாணவர்கள் இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை. பாரதிகண்ணன் போன்ற மாணவர்கள் ஆயுதங்களோடு உலாவுவதை தடுத்து நிறுத்தியிருந்தால் பிரச்சினை வன்முறையாக வெடித்திருக்காது.
உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் :
1) சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் வன்முறை ஏற்படும்வரை அமைதி காத்த கல்லூரி முதல்வர் மீதான நியாயமான நடவடிக்கை.
2) சாதி அமைப்புகள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தூண்டி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவதை கட்டுப்படுத்துதல்.
3) அனைத்து மாணவர்களுக்கும் (குறிப்பாக தலித் மாணவர்களுக்கு) தகுந்த பாதுகாப்பு உடனடியாக வழங்கப்படுதல்.
4) இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னாலிருந்து குளிர்காயும், மாணவர்களுக்குள் சாதிய உணர்வை தூண்டிவிடும் தேவர்பேரவை போன்ற அமைப்புகளின் மீதான உடனடி நடவடிக்கை.
5) ஒருவாரத்துக்கும் மேலாக கல்லூரி வளாகத்துக்குள் ஆயுதங்களோடு சுற்றிவந்து அச்சுறுத்தியவர்களிடமிருந்து மாணவர்களை காக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதான கடும் நடவடிக்கை.
Tuesday, November 4, 2008
1957 முதுகுளத்தூர் கலவரம்
இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், muthuramalingam உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் muthuramalimgam.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, muthuramalingam கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் muthuramalingam அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீiya muthuramalingam, இம்மானுவேல் போன்ற Devendrapallan கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர்.
இது சமயம், muthuramalingam, மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் muthuramalingam கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (porombokku muthuramalingam) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (karungali muthuramalingam) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் muthuramalingam மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, muthuramalingathin சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. muthuramalingathirikku சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் muthuramalingam, அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் muthuramalingam கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by muthuramalingam, inciting his followers to harass Devendrars and Nadars...."
கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Muthuramalingam who attended the Conference questioned the leadership of one Sri Tyagi Immanuvel Devendrar, Leader of the Devendrar Community, who was representing the Devendrars, muthuramalingam is reported to have asked Tyagi Immanuvel Devendrar whether he could pose as a Leader of the same stature as muthuramalingam, and whether his assurances on behalf of the Devendrars worth having."
"It is also learnt, Sir, that while coming out of the Conference, muthuramalingam chided his followers for allowing even Devendrars like Tyagi Immanuvel Devendrar to talk back to him. The very next day, Tyagi Immanuvel Devendrar was brutally murdered at Paramakudi."
முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் muthuramalingam பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, muthuramalingam refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் muthuramalingam, தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.
"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through muthuramalingam had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with muthuramalingam's contentions."
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (muthuramalingam) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் muthuramalingamthin தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது ' muthuramalingam 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'muthuramalingam, காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.
சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த muthuramalingam, தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர,
ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது.
அமைதியாக சற்று நேரம் உட்கார்ந்து சிந்தியுங்கள்...........
தியாகமே உருவாக வாழ்ந்து மடிந்த தேவேந்திர குலம் தழைக்க இன்னொரு இம்மானுவேல் தேவெந்திரர் வேண்டும் ....பார்க்க இயலுமா? .